உங்கள் இரத்தச் சர்க்கரை 4.0 mmol/L (70 mg/dl) அளவுக்குக் குறைவாகும்போது(குறையும்போது) இரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படுகிறது.
இரத்தச் சர்க்கரைக் குறைவுக்குச் சிகிச்சை செய்யாமல்.
விட்டுவிட்டால்(புறக்கணித்தால்) ஆபத்தாகிவிடலாம். சுயநினைவு இழக்கப்படலாம். ஒருவர் சுயநினைவை இழந்துவிட்டால், உடனடியாக அவசர மருத்துவ வாகனத்தை அழையுங்கள். அவருக்கு எந்தவோர் உணவோ பானமோ கொடுக்காதீர்கள்.
உங்களுக்கு வழக்கமான அறிகுறிகள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.